[ஈஸ்வரன் டிரெய்லர் எப்போது ரிலீஸ்?

Published On:

| By Balaji

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படம் ஈஸ்வரன். இந்தப் படத்தின் டிரெய்லர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா லாக்டவுன் முடிந்து, தளர்வுகள் தொடங்கியபோது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமானார். திண்டுக்கல் பகுதியில் 28 நாட்களுக்குள் ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடித்து சென்னைக்குத் திரும்பியது படக்குழு. உடனடியாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்கினார் சுசீந்திரன்.

பொங்கலுக்கு வெளியிட்டுவிட வேண்டும் என்று சிம்பு விரும்பியதைத் தொடர்ந்து, படமும் விரைவாக முடிந்து தயாரானது. இந்த நிலையில், வரும் பொங்கலுக்கு மாஸ்டருடன் மோதுகிறது ஈஸ்வரன். மாஸ்டர் படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாவதால், அடுத்த நாளான ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் வெளியாகிறது.

திரைத்துறையினர் விரும்பியது போல 100 சதவிகிதம் திரையரங்க இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. அதனால், ஈஸ்வரன் படமும் சென்சார் முடிந்து 2.11 நிமிடம் ரன்னிங் டைமுடன் வெளியாகிறது. சிம்புவுடன் நிதி அகர்வால், நிவேதா ஸ்வேதா, பாரதிராஜா மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தமன் இசையில் பாடல்கள் ஆன்லைன் தளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், படத்தின் டிரெய்லர் இன்னும் வெளியாகவில்லை.

திரையரங்குகளில் 100 சதவிகிதம் அனுமதி கிடைத்தால்தான் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள் படக்குழுவினர். அதனால், டிரெய்லரை வெளியிடாமல் காத்திருந்தார்கள். தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், ஈஸ்வரன் டிரெய்லரைத் தூசிதட்டி எடுத்திருக்கிறார்கள். எப்படியும், இந்த வாரம் ஈஸ்வரன் டிரெய்லர் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஜனவரி 9ஆம் தேதியாக இருக்கலாம் என்கிறார்கள். ரசிகர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக இந்த டிரெய்லர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

**-ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share