ரவீந்திர நாத் தாகூரின் ‛3 உமன்’ என்ற நாவல் மிகவும் புகழ் பெற்றது. இதில் மூன்று விதமான பெண்களின் வாழ்க்கையை அவர் எழுதியுள்ளார்.
தற்போது இந்த நாவல் இந்தி, ஆங்கில மொழிகளில் திரைப்படமாகிறது. இதனை இஷிதா கங்குலி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்தியா, அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பில் படம் தயாராகிறது.
இதுபற்றி இஷிதா கங்குலி கூறியிருப்பதாவது, கொரோனா காலத்தில் இந்த படம் பற்றி ஐஸ்வர்யா ராயிடம் பேசினேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. இதில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவரைத் தவிர மேலும் இரண்டு கதாநாயகிகள் கதாபாத்திரம் உள்ளன. அதில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
**அம்பலவாணன்**
�,