‘வலிமை’ படத்திலிருந்து நீக்கப்பட்ட யோகி பாபு?

entertainment

’வலிமை’ படத்தில் இருந்து நடிகர் யோகி பாபு நடித்த பகுதிகள் நீக்கப்பட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கும் படம் ‘வலிமை’. படம் கடந்த வியாழன் அன்று தியேட்டரில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளே தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 30 கோடிக்கும் அதிகமான வசூலை ‘வலிமை’ பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஜித்துடன் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அஜித்- புகழ் வரும் காட்சி ரசிக்கதக்கதாக இருந்ததாக பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் புகழும் ‘வலிமை’ படத்தில் அஜித்துடன் நடித்ததற்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அதே போல, ‘வலிமை’ படம் குறித்து ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் நடிகர் யோகி பாபுவின் பெயரும் இருந்தது. ஆனால், இப்போது கிட்டத்தட்ட 2.30 மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடக்கூடிய இந்த படத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள காட்சிகள் இடம் பெறாமல் இருப்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

படத்தின் நீளம் காரணமாக அந்த காட்சிகளை குறைத்திருக்கலாம் என ஒரு தரப்பு கூறி வருகிறது. இன்னொரு தரப்பு, யோகி பாபுவின் சம்பள பிரச்சனை மற்றும் கால் ஷூட் பிரச்சனைகள் காரணமாக அவரது காட்சிகள் இடம்பெறவில்லை எனவும் கூறி வருகிறது. இது மட்டுமல்லாமல், யோகி பாபுவின் சம்பள பிரச்சனை மற்றும் கால் ஷூட் பிரச்சனைகள் காரணமாக அவரது காட்சிகள் இடம்பெறவில்லை எனவும் நீக்கப்பட்ட காட்சிகள் (Deleted Scenes) பின்னாளில் வரும் போது இது வரலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து படக்குழு எதுவும் சொல்லவில்லை.

யோகி பாபு ஏற்கனவே நடிகர் அஜித்துடன் ‘விஸ்வாசம்’, ‘விவேகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *