பிக்பாஸ் அல்டிமேட்டில் புகழ்?

entertainment

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புகழ் பங்கேற்கிறார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் சில தினங்களில் அதாவது இந்த மாதம் 30ஆம் தேதியில் இருந்து புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமாக பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பு தொடங்க இருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் மட்டுமே 24*7 என ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு பிக்பாஸ் சீசன் ஐந்தின் இறுதி நிகழ்ச்சியின்போதே கமல்ஹாசன் அறிவித்தார். அதில் இருந்து இந்த நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களே இதிலும் கலந்து கொள்வார்கள் என்பதும் முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்து. அந்த வகையில் தற்போது சீசன் ஒன்றில் இருந்து கவிஞர் சிநேகன், ஜூலி, மூன்றாவது சீசனில் இருந்து வனிதா மற்றும் அபிராமி ஆகியோர் அதிகாரப்பூர்வமான போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் தவிர சீசன் மூன்றில் இருந்து ஷெரின், சுரேஷ் சக்ரவர்த்தி, ஐந்தாவது சீசனில் இருந்து நிரூப், தாமரை செல்வி, அபிநய், சுருதி ஆகியோரும் ஓவியா, பரணி ஆகிய போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும்.

இந்த நிலையில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் தவிர புதிய போட்டியாளர்களாக விஜய் டிவி பிரபலங்கள் சிலர் உள்ளே நுழைய அதிக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் சின்னத்திரை வட்டாரங்கள். அதன்படி, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் உள்ளே நுழைய இருக்கிறாராம். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு பின்பு அஜித், விஜய் சேதுபதி, சந்தானம் என முன்னணி நடிகர்களின் படங்களில் புகழ் பிஸியானார். இதனால் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கூட அவரை எதிர்ப்பார்க்க முடியவில்லை.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகழ் தன்னுடைய பார்ட்னரையும் சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தினார். இதனால் அவருடன் பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் போவாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

**ஆதிரா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.