jஇந்தி தேசிய மொழியா?: பிரபலங்கள் கருத்து!

entertainment

இந்தி நமது தேசிய மொழி என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்ததற்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், சோனு சூட், மதுபாலா, பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பத்திரிகையாளர் ஒருவர் கேள்விக்கு பதில்கூறும்போது கன்னட நடிகர் கிச்சா சுதீப், பான் இந்தியா படங்கள் தற்போது உருவாகி வருகிறது. இந்தி தேசிய மொழி இல்லைஎன்று கூறினார்

இதையடுத்து இந்தி நடிகர் அஜய் தேவ்கன், இந்தி தேசிய மொழி இல்லை என்றால், உங்களது தாய்மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி தான் நமது தாய் மொழி. தேசிய மொழியாகவும் எப்போதும் இருக்கும். ஜன கன மன என்று இந்தியில் நடிகர் கிச்சா சுதீப்புக்கு ட்விட்டரில் பதிலளித்தார்.

இதனைத்தொடர்ந்து, அவருக்கு பதிலளித்த நடிகர் கிச்சா சுதீப், எனது கருத்தை தவறாக புரிந்துகொண்டீர்கள், நேரில் பார்க்கும்போது கூறுகிறேன் என்று தெரிவித்த அவர், தனது அடுத்தப்பதிவில், நீங்கள் இந்தியில் அனுப்பிய உரை எனக்குப் புரிந்தது. நாங்கள் அனைவரும் இந்தியை மதித்து, நேசித்து, கற்றுக்கொண்டோம். ஆனால் எனது பதிலை கன்னடத்தில் தட்டச்சு செய்தால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன் என்று தெரிவித்தார்.

இவர்களின் இந்த ட்விட்டர் வாக்குவாதம் வைரலாகி தேசிய அளவில் விவாத பொருளானது

இதனால் இந்தி படரசிகர்கள், அஜய் தேவ்கனுக்கு ஆதரவாகவும், தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் தங்களது தாய்மொழிக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் கருத்துக்களை வெளியிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,அனைத்து மொழி திரைப்பட ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவரான நடிகர் சோனு சூட், நடிகை மதுபாலா, பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பொதுவெளியில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்

**நடிகர் சோனு சூட் **

இந்தி தேசிய மொழி அல்ல. இந்தியாவில் ஒரு மொழி உண்டு என்றால், அது பொழுதுபோக்கு தான். நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. நீங்கள் மக்களை மகிழ்வித்தால், அவர்கள் உங்களை நேசிப்பார்கள், உங்களை மதிப்பார்கள், உங்களை ஏற்றுக்கொள்வார்கள். தென்னிந்திய திரைப்படங்களின் வெற்றி இந்தி திரைப்படங்கள் தயாரிக்கப்படும் விதத்தை மாற்றும். திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போது பார்வையாளர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மக்கள் ஒரு சராசரி படத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொட்டி படம் பார்க்க மாட்டார்கள். நல்ல சினிமா மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

**நடிகை மதுபாலா**

நமக்கு ஒரு பொதுவான மொழி தேவை. கலைக்கு மொழி தேவையில்லை. இசையும், கலையும் மனதால் புரிந்து கொள்ளப்படுகின்றன. மொழி என்பது அதிகமான மக்களிடம் ஒரு கருத்தை கொண்டு செல்வதற்கான கருவி மட்டுமே. தமிழில் 1991-ம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படம், குறிப்பிட்ட பார்வையாளர்களிடம் மட்டுமே கொண்டு சேர்த்தது. ஆனால், அதே படம் 1994-ல் இந்தியில் வெளியானபோது, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தி விருப்பமானது என்பது எனக்கு வருத்தமளிக்கிறது, ஏனெனில் அரசியல் ரீதியாக அது மனிதர்களை இணைக்கும் கருவியை பறிக்கிறது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், நம்மை பிரிக்க மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைவருக்கும் புரியும் ஒரு மொழியை ஏற்க எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ‘ரோஜா’ படத்தில் கூட ஒரு தென்னிந்திய பெண் காஷ்மீர் சென்று அங்குள்ளவர்களுடன் மொழி தெரியாமல் அவர்களை அணுக முடியாமல் தவிக்கிறாள். அந்த வகையில், மொழி மனித மனங்களுக்கிடையேயான தொடர்பைத் தடுக்கிறது. அங்குதான் மொழி வருகிறது. இது மொழி பற்றியது அல்ல, ஆனால் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள மொழி தேவைப்படுகிறது.

**பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ்,**

அஜய் தேவ்கனின் ட்வீட்டை டேக் செய்து, “இந்தியாவிற்கு நீங்கள் பிரதமராக இருப்பதுபோல், இந்தியும் நமது தேசிய மொழிதான் சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**- அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *