அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஐபிஎல் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் நிறுவனம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. டிஜிட்டல் உரிமத்தை வியாகாம் நிறுவனம் பெற்றுள்ளது.
2023 – 2027 ஆண்டுகளுக்கான ஐபிஎல் டிவி ஒளிபரப்பு உரிமம் ஸ்டார் இந்திய நிறுவனத்தால் ரூ.23,575 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐபிஎல் டிஜிட்டல் உரிமம் வியாகாம்-18 நிறுவனத்தால் ரூ.23,758 கோடிக்கும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுக்காலத்தில் ஐபிஎல் தொடரில் மொத்தம் 410 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதன் தொலைக்காட்சி உரிமம் ரூ. 23,575 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒரு ஆட்டம் மட்டும் ரூ.57.5 கோடிக்கு ஏலம் சென்றுள்ளது. அதேவேளையில் டிஜிட்டல் உரிமம் ஒரு ஆட்டத்துக்கு ரூ.50 கோடி வழங்கப்படுகிறது. மொத்தத்தில் இரு பிரிவையும் சேர்த்து ஒரு ஆட்டத்தின் ஒளிபரப்பு உரிமம் வழியாக ரூ.107.5 கோடி வருமானத்தை பெற உள்ளது பிசிசிஐ.
கடந்த ஐந்து ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு வாங்கியிருந்தது. தற்போது இதைவிட இரண்டரை மடங்கு அதிகம் விலைக்கு ஏலம் சென்றுள்ளது.
**ராஜ்**
.