ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு: ஏலம் எடுத்த நிறுவனங்கள்?

2023-27 வரையிலான ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்ப இரண்டு நிறுவனங்கள் தனித்தனியே ஏலம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை முதன்முறையாக நான்கு பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்கி இருக்கிறது.
ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை – முதல் போட்டி, நான்கு ப்ளே ஆஃப், டபுள் ஹெட்டர் போட்டிகள் உரிமை, உலக நாடுகளுக்கான ஒளிபரப்பு உரிமை என நான்கு பிரிவுகளில் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதற்கான மின்னணு ஏலம் மும்பையில் நேற்று முன்தினம் (ஜூன் 12) காலை 11 மணியளவில் தொடங்கியது. ஏலத்துக்கான டெண்டர் விண்ணப்பம் வாங்கி, அவற்றை சமர்ப்பித்த தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் இணைப்பை வழங்கினார்கள். அன்றைய நாள் முடிவில் ஏலம் முழுமையாக நிறைவு பெறவில்லை.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 13) ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44,075 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்களுக்கான ஏலம் ரூ. 23,575 கோடிக்கும், டிஜிட்டல் தளங்களுக்கான ஒளிபரப்பு உரிமம் ரூ.20,500 கோடிக்கும் ஏலம் போனது.
2023-27 வரையிலான ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்ப இரண்டு நிறுவனங்கள் தனித்தனியே ஏலம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்றும் ஏலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே எந்தெந்த நிறுவனங்கள் ஏலத்தில் வெற்றி பெற்றன என்கிற இறுதி முடிவு வெளியாகும் என்று தெரிகிறது.

**-ராஜ்**

.

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts