இன்று ஐபிஎல் நிறைவு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்

entertainment

ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கியது. பத்து அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் இறுதிச் சுற்றை எட்டின.
எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடைசி இரு இடங்களுக்குத் தள்ளப்பட்டன. இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (மே 29) இரவு மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கு முன்பாக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் மேடையைக் கலக்க உள்ளனர்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *