~இருப்பிடத்தை மறைக்கும் ஐ போனின் புதிய அப்டேட்!

entertainment

தன்னுடைய பயன்பாட்டாளர்களின் ப்ரைவசிக்கு ஆப்பிள் நிறுவனம் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும். அதனை உறுதிபடுத்தும் விதமாக, ஐ-ஃபோன் 11-க்கு பிரத்யேகமான ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐ-ஃபோன் 11 பயன்படுத்துவோருக்காக கொண்டுவரப் பட்டிருக்கும் iOS 13.3.1 எனப்படும் இந்த அப்டேட், ஐ-ஃபோனில் பொருத்தப்பட்டிருக்கும் ‘அல்ட்ரா வைட்பேண்ட் சிப்’ பை செயலிழக்கச் செய்து அதனை உபயோகிப்பவர் இருக்கும் இடத்தை மறைத்துவிடும்.

**அல்ட்ரா வைட்பேண்ட் சிப் என்றால் என்ன?**

ஸ்மார்ட்ஃபோனில் ஒருவர் தனது இருப்பிடத்தை மறைத்து வைத்தாலும், அல்ட்ரா வைடுபேண்ட் சிப் உதவியும் நம்மால் அந்த ஸ்மார்ட்ஃபோனின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியும். இந்த சிப் பொதுவாக ராணுவத்தில் வீரர்களின் இருப்பிடத்தை கண்காணிக்கவும், ரோபோட்டை தொலைதூரத்திலிருந்து இயக்குவதற்கும் பயன்படுகிறது.

ஆனால் இனிமேல் ஐ-ஃபோன் 11ஐ அவ்வாறு கண்டுபிடிக்க முடியாது என்பது தான் இந்த அப்டேட். இதன் மூலம் ஐ-ஃபோன் 11 பயன்பாட்டாளர்கள் தங்களுடைய இருப்பிடத்தை ப்ரைவேட்டாக வைத்துக்கொள்ள முடியும். இந்த அம்சம் மற்ற ஐ-ஃபோன்களிலும் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *