இன்னிங்ஸ் தோல்வி: விராட் சொன்ன விளக்கம்!

entertainment

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தத் தோல்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். “டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்தது தவறில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாகத் தென்பட்டது. நாங்கள் சரியாகப் பந்து வீசவில்லை. அணிகள் எப்படி விளையாடியதோ அப்படித்தான் இந்த ஆட்டத்தின் முடிவு வந்துள்ளது.

இங்கிலாந்து அணி மீண்டு வருவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுத்தால் தான் கீழ் நடு வரிசை வீரர்கள் மேலும் ரன்கள் எடுக்க முடியும். பேட்டிங் அணியாக நாங்கள் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. உண்மையில் இங்கிலாந்து அணி இந்த வெற்றிக்குத் தகுதியானதே.

முதல் இரு ஆட்டங்களில் நாங்கள் நன்றாக விளையாடினோம். எங்களுடைய பேட்டிங் குழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அடுத்த டெஸ்டில் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அணியைத் தேர்வு செய்வோம். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பார்கள். ஓவல் டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்து உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்க உள்ளது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0