ஹைதராபாத்தில் ‘லத்தி’ படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும்போது நடிகர் விஷாலுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் வினோத் இயக்கத்தில் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். படத்தில் இடம் பெறும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் நடந்தது. கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர்.
அடியாட்களுடன் மோதிக் கொண்டு குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் நொடி பொழுதில் தவற விட்டதால் காங்கிரீட் சுவற்றில் மோதி கையில் அடிப்பட்டது. சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்ந்தார்.
கை வலியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு மேலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனது. அதனால், முதலில் கைக்கு டிரீட்மெண்ட் எடுத்துகொள்ளலாம், பிறகு படப்பிடிப்பை தொடரலாம் என, ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர்கள் ரமணா, நந்தா முடிவு செய்தார்கள்.
அதனால் நாளை கேரளாவுக்கு சென்று விஷால் டிரீட்மெண்ட் எடுக்கிறார். இதனால் ‘லத்தி’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கேரளா சிகிச்சையில் முழுமையாக குணமடைந்த பிறகு மார்ச் மாதத்தில் இருந்து ‘லத்தி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
**ஆதிரா**