Wபும்ரா – தவான் ஆட்டத்துக்கு ரெடி!

Published On:

| By Balaji

ஜனவரி 5ஆம் தேதி தொடங்க இருக்கும் இலங்கையுடனான டி20 தொடரில் பும்ரா மற்றும் தவான் இடம்பிடித்துள்ளார்கள். இந்த 2019ஆம் ஆண்டு முழுவதும் கலக்கிய ஸ்டார் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா இலங்கை தொடரில் மட்டும் ஓய்வெடுத்துள்ளார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் இன்னிங்க்ஸை தொடங்க இருக்கிறார்.

கை பெருவிரல் காயம் காரணமாக 2019 உலகக் கோப்பைப் போட்டியின் பாதியில் வெளியேறிய ஷிகர் தவான் வெகு நாட்களுக்குப் பின் களத்தில் இறங்குவது அவருக்கு மீண்டும் அதிரடி ஆட்டக்காராகத் திகழ நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் 13 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா, தசைப்பிடிப்பு காரணமாக ஆகஸ்ட் மாதம் அணியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு மீண்டும் களமிறங்கும் பும்ரா, இந்திய அணி சிறப்பான பௌலிங் டீமாக திகழ மிகவும் உறுதுணையாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. தீபக் சஹாருக்குப் பதிலாக பும்ரா வருவதால் ஏப்ரல் மாதம் வரை சஹார் இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக பந்து வீசிய சைனி பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை அணியுடன் இந்தியா விளையாடும் டி20 தொடரில் இளம் வீரரான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா அடுத்த மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடுவதால் இந்த அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணி: **(இலங்கை தொடர்)**

விராட் கோலி (Captain), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் (WK), சிவம் டுபே, சஹால், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்தூள் தாக்கூர், நவதீப் சைனி, ஜஸ்ப்ரிட் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்.

இந்திய அணி: **(ஆஸ்திரேலியா தொடர்)**

விராட் கோலி (Captain), ரோஹித் ஷர்மா (Vice Captain), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷப் பண்ட் (WK), சிவம் டுபே, சஹால், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துள் தாக்கூர், நவதீப் சைனி, ஜஸ்ப்ரிட் பும்ரா, முஹம்மத் ஷமி.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share