?இந்தியா வெற்றி தொடருமா?

entertainment

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் முதலாம் சூப்பர் லீக் கால் இறுதி போட்டி இன்று(28.01.2020) நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்வஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு துவங்கவுள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. 8 புள்ளிகளுடன், +3.598 நெட் ரன்-ரேட் எடுத்து லீக் சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய அணிக்காக பேட்டிங்கில் அசத்திவரும் ஜஸ்வால், 3 போட்டிகளில் விளையாடி 145 ரன்களை எடுத்துள்ளார். தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதில் அவர் எடுத்த 2 அரை சதங்களும் அடங்கும். பவுலர்களை பொறுத்தவரை, ரவி பிஷ்ணோய் மூன்று போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த முறை இரு அணிகளும் சூப்பர் லீக் கால் இறுதி போட்டியிலேயே மோதுவது இந்த உலகக்கோப்பை தொடரை இன்னும் சூடு பிடிக்கவைத்துள்ளது.

போட்டி நாளான இன்று வானிலை தெளிவாக காட்சியளிக்கின்றது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு பக்கமும் சாதகமான சென்வஸ் மைதானத்தில், இதுவரை நடைபெற்ற லீக் சுற்று போட்டிகளில், முதலில் பேட் செய்பவர்கள் சராசரியாக 243 ரன்கள் வரை எடுக்கமுடியம். எனவே, டாஸ் வென்று முதலில் பந்து வீசுபவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொல்லலாம்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *