இங்கிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

Published On:

| By Balaji

டி20 முதல் போட்டியில் (மார்ச் 12) இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தோல்விக்கு இன்றைய (மார்ச் 14) ஆட்டத்தில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா இந்திய அணி என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஐந்து டி20 தொடரில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.

முதல் ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக ரன்கள் எதுவும் எடுக்காமல் விராட் கோலி ஆட்டமிழந்ததை வாகனம் ஓட்டிகளின் விழிப்புணர்வுக்கான எடுத்துக்காட்டாக உத்தரகாண்ட் போலீஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தரகாண்ட் காவல் துறையின் அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்ட செய்தியில், “ஹெல்மெட் அணிவது போதியது இல்லை! வாகனம் ஓட்டும்பொழுது முழு கவனம் தேவை. அப்படி இல்லையென்றால், கோலி போன்று நீங்கள் பூஜ்யம் ஆகி வெளியேறி விடுவீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா இந்திய அணி என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இன்றைய ஆட்டம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. போட்டியைக் காண 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

**-ராஜ்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share