தமிழ் சினிமாவில் கதாநாயகன், காமெடி நடிகர்கள் எல்லோரும் பிரபலமாக தொடங்குகிற கட்டத்தில் தங்கள் பெயருக்கு முன்னால் ஒரு அடைமொழி, அல்லது பட்டத்தை தங்களது அடிப்பொடிகள் மூலம் வழங்கச் சொல்லி அதனை படத்தின் தலைப்பு, மற்றும் விளம்பரங்களில் இடம்பெறுமாறு ஏற்பாடு செய்வார்கள்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்திருக்கும் ஜெய்பீம் படம் சம்பந்தமாக அப்படத்தை வெளியிட உள்ள அமேசான் நிறுவனம் அக்டோபர் 22 அன்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில் சூப்பர் ஸ்டார் சூர்யா எனக் குறிப்பிட்டு இருந்தது. ஊடகங்களிலும், தொழில்முறை ட்விட்டர் தரப்பும் ஜெய்பீம் படத்தை விளம்பரபடுத்துகிறபோது சூப்பர்ஸ்டார் சூர்யா என்றே குறிப்பிட்டன.
தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, தல உள்ளிட்ட பட்டங்கள் அனைத்துமே வேறொருவர் உபயோகித்தால் சர்ச்சையாகி விடும் சமீபத்தில் கூட சிலம்பரசன், தனுஷ் உள்ளிட்டோர் தோனியைத் தல என்று குறிப்பிட்டதற்காக அஜித் ரசிகர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், மோசமான வகையில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள்.
அதேபோல் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சையில் சிக்கினார் சூர்யா. அக்டோபர் 22-ம் தேதி ‘ஜெய் பீம்’ ட்ரெய்லர் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பில் சூப்பர் ஸ்டார் சூர்யா என்று குறிப்பிட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் கோபமடைந்தார்கள். சிலர் சூர்யாவைத் திட்டவும் தொடங்கினார்கள்.
இதனிடையே, ‘ஜெய் பீம்’ ட்ரெய்லர் வெளியீடு இணையம் வழியே நடைபெற்றது. இதில் சூர்யா கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் சூப்பர் ஸ்டார் சூர்யா என்று குறிப்பிட்டார். எனக்கு இன்னும் உறுத்திக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி சார் ஒருவர் மட்டும்தான் என்று சூர்யா தெரிவித்தார்.
**-இராமானுஜம்**
�,