தமிழ்த்திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளையராஜா – பா.இரஞ்சித் கூட்டணி தற்போது உறுதியாகியிருக்கிறது.
‘நட்சத்திரங்கள் நகர்கின்றன’ படத்தை இயக்கி முடித்திருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், அடுத்து ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வையை சமூக வலைதளங்களில் நேற்று இரவு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டார். அதில் பா.இரஞ்சித்தின் பெயருக்கு இணையாக இளையராஜாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக ராஜா – பா.இரஞ்சித் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளியானபோது, பா.இரஞ்சித் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று ராஜா சொன்னதாகச் செய்திகள் வெளியாகின.
**-அம்பலவாணன்**
�,
+1
+1
+1
+1
+1
+1
+1