ஜி.வி.பிரகாஷின் இடி முழக்கம்: போஸ்டரை வெளியிட்ட உதயநிதி

entertainment

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம், நீண்ட வருடங்களுக்குப் பிறகு வருகிற ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் ‘இடி முழக்கம்’

2021ஆம்ஆண்டு செப்டம்பர் மாதமே படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கையில் கத்தியுடன், எண்ணெய் வழிந்த தேகத்துடன் கிராமத்து இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் அந்த போஸ்டரில் உள்ளார்.

எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் போராட்டத்தை இயல்பு மாறாமல் திரைப்படங்களில் பதிவு செய்பவர் சீனுராமசாமி. அப்படி ஒரு திரைக்கதையில் ஜி.வி.பிரகாஷ் – சீனுராமசாமி இணையும் முதல் படம் இது.

‘இடி முழக்கம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். ‘மாமனிதன்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக சீனு ராமசாமி படத்தில் காயத்ரி நடித்துள்ளார்.

மேலும், சரண்யா பொன்வண்ணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு, ஆக்‌ஷன் த்ரில்லராக கிராமத்துப் பின்னணியில் ‘இடி முழுக்கம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, ஏ.ஆர்.அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.

**ராமானுஜம்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.