படப்பிடிப்பில் நிஜ துப்பாக்கி : ஒளிப்பதிவாளர் பலி!

Published On:

| By Balaji

ஹாலிவுட்டில் படப்பிடிப்புக்காக பயன்படுத்த வேண்டிய பொம்மை துப்பாக்கிக்கு பதிலாக நிஜ துப்பாக்கியை பயன்படுத்தியதால் பெண் ஒளிப்பதிவாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஹாலிவுட் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் இயக்குநரான ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் அமெரிக்க திரைப்படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் மெக்சிகோ மாகாணத்தில் உள்ள சாண்டா என்ற நகரில் நடைபெற்று வந்தது.

நேற்று இந்தப் படப்பிடிப்பில் நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் எதிர்பாராதவிதமாக குண்டுகள் அந்தப் படத்தின் பெண் ஒளிப்பதிவாளரான ஹலினா ஹட்சின்ஸ் மீதும், படத்தின் இயக்குநரான இயக்குநர் ஜோயல் சோசா மீதும் பாய்ந்தது.

இந்தத் திடீர் தாக்குதலில் காயமடைந்த ஒளிப்பதிவாளர் ஹலினா ஹெலிகாப்டர் மூலமாக நியூ மெக்ஸிகோ பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கே அவரைக் கொண்டு வருவதற்குள் அவரது உயிர் பிரிந்தது.

காயமடைந்த படத்தின் இயக்குநரான ஜோயல் செயின்ட் வின்சென்ட் வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து படக் குழுவினரிடமும் நடிகர் அலெக் பால்ட்வினிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

**-இராமானுஜம்**

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share