Uமீரா மிதுனுக்கு விவேக் அட்வைஸ்!

Published On:

| By Balaji

தெலுங்கு திரையுலகில் #greenindiachallenge பிரபலமாகி வருகிறது. அண்மையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு, மரக்கன்றுகளை நட்ட தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு, அந்த சவாலைத் தமிழ் திரைத்துறையின் நட்சத்திரமான நடிகர் விஜய்க்கு விடுத்திருந்தார்.

இந்த சவாலை ஏற்ற நடிகர் விஜய், தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அதனைப் புகைப்படமாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 11) பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையம் முழுவதும் பரவி, லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகிறது.

இந்த ட்வீட்டில் நடிகர் விஜய், ‘மகேஷ் பாபு காரு இது உங்களுக்காக என்றும் ஆரோக்கியமாக இருங்கள்’ என்றும் பதிவிட்டிருந்தார். இதனை ரீட்வீட் செய்த நடிகை மீரா மிதுன், ”உங்களது வீட்டுக்குள் மரம் நடுவது சமூக அக்கறை அல்ல. நடிகர் விவேக்கைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று விஜய்யை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்குமே மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இருவரும் இயற்கைக்கு ஏதாவது நல்லது செய்யும்போது, அதனால் ஈர்க்கப்பட்டு இருவரது ரசிகர்களும் அதைப் பின்பற்றுவார்கள். இதனை நாம் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம். நமது நோக்கம் பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என்பதுதான். மீரா மிதுன் விஜய் மற்றும் மகேஷ்பாபு ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் குறித்து மீரா மிதுன் அவதூறாக பதிவிட்டு வந்ததற்கு, இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share