aவிக்கியாக மாறிய ‘தாராள பிரபு’ ஹரீஷ்

entertainment

ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள ‘தாராள பிரபு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பெரும் ரசிகர்களைப் பெற்ற நடிகர் ஹரீஷ் கல்யாண், இளம் தலைமுறை ரசிகர்களையும் தக்கவைக்கும் விதமாக கலர்ஃபுல்லான நியூ ஜெனரேஷன் கதைகளில் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘தனுசு ராசி நேயர்களே’ போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தாராள பிரபு’. இந்தப் படத்தின் டீசர் நேற்று (ஜனவரி 29) வெளியானது.

இந்தியில் 2012ஆம் வெளியான விக்கி டோனார் திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள ‘தாராள பிரபு’ திரைப்படம் தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. ஆயுஷ்மான் குர்றானா, யாமி கெளதம் நடித்து வெளியான ‘விக்கி டோனார்’ திரைப்படம் விந்தணுக்களை தானம் செய்து அதன் மூலம் சம்பாதிக்கும் இளைஞரின் கதையைப் பேசியது. அதே கதையைப் பேசவரும் தாராள பிரபு திரைப்படத்தின் டீசர், படம் தொடர்பான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.

கிருஷ்ண மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தான்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்துக்கு சுப்பு மற்றும் சுதர்சன் நரசிம்மன் கதை எழுதி உள்ளனர். மேலும் விவேக் – மெர்வின், சீன் ரோல்டன், இன்னோ கேங்கா, பரத் ஷங்கர், கபீர் வாசுகி, மட்லி ப்ளுஸ் இசைக்குழு மற்றும் அனிருத் போன்ற எட்டு இசையமைப்பாளர்கள் படத்துக்கு இசையமைக்கின்றனர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *