n‘ஒரே நாடு, ஒரே மொழி’: ஜிப்ஸி சென்சார் கட்-2!

Published On:

| By Balaji

ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தில் இருந்து சென்சார் செய்யப்பட்ட மற்றொரு காட்சியும் யூட்யூபில் வெளியாகியுள்ளது.

வெறும் சுவரொட்டிகளையும், தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களையும் மட்டுமே நம்பி, ஒரு காலம் வரை தமிழ் சினிமா புரொமோஷன்கள் இருந்துவந்தது. ஆனால் இன்றைய சமூகவலைதளங்களின் வளர்ச்சியாலும், அளவுகடந்த இணைய பயன்பாட்டாலும், சினிமா புரொமோஷன் முறைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டீசர், ட்ரெயிலர், பாடல்கள் வெளியிடுவது தொடங்கி என்ன அப்டேட் வரப்போகிறது என்பதற்கும் ஒரு அப்டேட் கூறும் அளவிற்கு அனைத்திலும் மாற்றம் ஏற்படுள்ளது.

ஒருகட்டத்தில் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டி திரைப்படம் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை ஸ்னீக் பீக்காக வெளியிடத் தொடங்கினர். அந்த முறையிலும் மாற்றம் ஏற்பட்டு படத்திலிருந்து நீக்கிய ‘டிலிட்டட் சீன்ஸ்’-ஐ வெளியிட்ட திரைத்துறையினர், தற்போது சர்ச்சைக்குரிய காட்சி என்று சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளையும் யூட்யூப் போன்ற தளங்களில் வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்து வெள்ளிக்கிழமை(மார்ச் 6) வெளிவரவிருக்கும் ஜிப்ஸி திரைப்படத்தில் இருந்து சென்சார் கட் காட்சிகள் வெளியாகியுள்ளது. முதல் ஸ்னீக் பீக் வீடியோ நேற்று(மார்ச் 3) வெளியானதைத் தொடர்ந்து நமது மின்னம்பலம் மொபைல் தினசரியில் [காவலர்களை கிண்டல் செய்யும் ‘ஜிப்ஸி’ சென்சார் காட்சி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/entertainment/2020/03/03/43/gypsy-movie-censor-cut-sneak-peek) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து, இன்று(மார்ச் 4) இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதியநாத்தின் உடை அலங்காரம் மற்றும் உருவ தோற்றமுடைய அரசியல்வாதி ஒருவர், **“ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி இது தான் என் வாழ்க்கையில் இலட்சியம். இந்த கங்கையில் அதர்மத்தின் ரத்தம் கலந்து தேசம் புனிதமாகட்டும்.”** என்று பிரச்சாரம் செய்வதாகவும், அதற்கு அவரைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் ஆக்ரோஷமாகக் கோஷமிடுவதாக அந்தக் காட்சி அமைந்துள்ளது.

இதுவரை வெளியான ஸ்னீக் பீக் காட்சிகள் மற்றும் பிற வீடியோக்கள் மூலமாக ஜிப்ஸி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share