தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்கள் தயாரிப்பதில், விளம்பரப்படுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ‘ ஜென்டில்மேன்’ கே.டி.குஞ்சுமோன். அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள, ‘ ஜென்டில்மேன் 2 ‘ படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு பரிசு அறிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘ஜென்டில்மேன்’. 1993-ல் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதனை தயாரித்தவர் குஞ்சு மோன்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர். சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் என பல முன்னணி திரைக்கலைஞர்களுடன் பணி புரிந்துள்ளார். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதனை ஒட்டியே இந்த ‘ஜென்டில்மேன் 2’ தங்கக்காசு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஜென்டில்மேன் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் எவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ரசிகர்களுக்கு இதனை ஒரு போட்டியாக அறிவித்து அசத்தியுள்ளார். விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் அவர் யாரென சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படவுள்ளது. படத்தின் மற்ற குழுவினர் அறிவிப்பும் இவ்வாறே நிகழவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**
�,