கடந்த 1993இல் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என கடந்த 2020இல் அதன் தயாரிப்பாளர் குஞ்சுமோன் அறிவித்தார். பின்பு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒருவர் பின் ஒருவராக அறிவித்தார்.
அந்த வகையில் இசையமைப்பாளர் கீரவாணி, கதாநாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி மற்றும் பிரியாலால் என்ற புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் யார் கதாநாயகன் என்பது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இப்போது இயக்குநர் யார் என்பதை தயாரிப்பாளர் குஞ்சுமோன் அறிவித்துள்ளார். இயக்குநர் கோகுல் கிருஷ்ணா என்பவர்தான் படத்தை இயக்க உள்ளார்.
இவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் இயக்குநராகப் பணியாற்றியவர். நானி, வாணிகபூர் நடித்த ‘ஆஹா கல்யாணம்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.
‘ஜென்டில்மேன் 2’ திரைப்படத்தில் இயக்குநராக ஒப்புக்கொண்டது பற்றி கோகுல் கிருஷ்ணா பேசுகையில், “இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் பொறுப்புள்ளவனாக இருக்க விரும்புகிறேன். திரைக்கதை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. என்னுடைய முதல் படம் முடித்ததும் வேறு சில படங்களின் திரைக்கதைகளில் வேலை பார்த்தேன். பின்பு இணைய தொடர் ஒன்றிலும் சில வருடங்கள் வேலை பார்த்தேன். அது இப்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அப்போதுதான் என் அடுத்த படத்துக்குத் தயாரானபோது இந்தப் பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மகிழ்ச்சியாகவும் பொறுப்பாகவும் உணர்கிறேன்” என்று பேசியுள்ளார்.
**ஆதிரா**
‘ஜென்டில்மேன் 2’ பட இயக்குநர் அறிவிப்பு!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel