Kமனங்களை கலங்கடிக்கும் கணம்!

Published On:

| By Balaji

�அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த், ரிதுவர்மா நடிக்கும் படம் கணம். அம்மா பாசத்தை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரித்து வருகின்றனர் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.

நாகார்ஜுனாவை திருமணம் செய்த பின்பு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை அமலா 30 வருடங்களுக்குப் பின்பு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ் ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசர் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் பற்றிஇயக்குனர் கூறுகையில், எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்து விட அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அந்த ‘கணம்’ உருவான கதை தான் இந்த “கணம்”. இந்த திரைக்கதையை தாய் மகன் உறவு, சயின்ஸ் பிக்சன் என பல தளங்களில் பயணிக்கும் வித்தியாசமான படைப்பாக இப்படத்தை உருவாக்கினேன்.

இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்து, வித்தியாசமான கதைகளை தயாரிக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் சொன்னேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் அவரை கலங்கடிக்க வைத்து விட்டது” என்றார் ஶ்ரீகார்த்திக்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

**-இராமானுஜம்**

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share