எப்பவுமே பயபுள்ள இப்படி கேட்க மாட்டான்… ஆனா இன்னிக்கு அப்படி கேட்டுட்டான். தப்பு என் மேலதான்… கொஞ்ச நாளா நான் அவனை வச்சிக்கிட்டு அதுமாதிரியான சேனல்களை பாத்திருக்கக் கூடாது. சரி, இன்ட்ரஸ்டா இருக்கே, சூடா சுவாரஸ்யமா இருக்கேன்னு நினைச்சு பாத்து தொலைச்சுட்டேன். எனக்குத் தெரியாமலே நான் பாத்ததை பயப்ள்ளையும் பாத்திருக்கான் போலிருக்கு. அட…. அப்படி என்ன கேட்டுட்டான்னுதானே நீங்க கேக்க வர்றீங்க… நேத்து நைட் உட்கார்ந்து சாப்பிடும்போது, ‘அப்பா நம்ம வீட்டுல முதல்வர் வேட்பாளர் யாருப்பா?’னு கேட்டுத் தொலைச்சுட்டான். பகீர்னு ஆயிருச்சு. பின்னே… நிரந்தர முதல்வருக்கு எதிர்த்தாப்ல உட்கார்ந்துகிட்டு முதல்வர் வேட்பாளர் யார்னு கேட்டா என்ன ஆவறது? இன்னிலேர்ந்து டிவில நியூஸ் சேனல் அதுலயும் விவாதம் பார்க்க இடைக் காலத் தடை போட்டாச்சு.
**ஜோக்கர்**
வடக்கன்ஸ் ~ எனக்கு ஹிந்தி தெரிய போயிதான் தமிழ்நாடு, ஆந்திரா மாதிரியான பாரீன்ல வேலை செஞ்சு நல்ல நிலைமையில இருக்கேன். என் பாணிபூரி வண்டி வெளியில நிக்குது.
The little horse whisperer pic.twitter.com/zHoM9jtLhY
— Welcome To Nature (@welcomet0nature) August 12, 2020
**சப்பாணி**
ஆங்கிலத்திற்கும் அமுதென்று பேர் “salary credited”
**mohanram.ko**
உடல் உறுப்பு தானம் கொடுக்கறவங்க கிட்ட சொல்லி, நம்ம கட்சியில மூளை இல்லாம பேசறவங்களுக்கும், மூளையை வாங்கி கொடுங்க தலைவரே
Wow! pic.twitter.com/wgAuRDvS4p
— CCTV_IDIOTS (@cctv_idiots) August 13, 2020
**சப்பாணி**
விசா இல்லாம வெளிநாட்டுக்கு கூட போகலாம்.ஆனா இ-பாஸ் எடுக்காம சொந்த கிராமத்துக்கு கூட போகமுடியல….. #அரே ஓ சம்போ
**James Stanly**
எங்க ஊருக்கு 3மொழி இருக்கட்டும்.. உங்க ஊர் 3மொழி என்னடா.. ஹிந்தி, இந்தி, Hindi..
**தர்மஅடி தர்மலிங்கம்**
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க புதிய திட்டம்: பிரதமர் மோடி!?
அவங்ககிட்ட இருந்து இன்னும் உங்களுக்கு அதிக வரி தேவைபடுதுன்னு சொல்லுங்க!
**மயக்குநன்**
ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது பாஜகதான்!- ஆந்திர மாநில பாஜக தலைவர்.
ஆமாமா… அடிக்கடி ‘பல்பு’ கொடுத்திருக்காங்க..!
**myck**
கடினமாக உழைத்தவர்கள்
எல்லாம் முன்னேறவில்லை.
கவனமுடன் நம்பிக்கையை
உழைப்பில் விதைத்தவர்களே..!
வாழ்க்கையில்…!
உயர்ந்து உள்ளார்கள்.
– குறுஞ் சிந்தனை
**PrabuG**
இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயல்பாட்டை தொடங்குவதற்காக, முகேஷ் அம்பானியுடன் டிக்டாக் நிறுவனர் பேச்சுவார்த்தை – செய்தி. அப்போ புரியலை. இப்போ புரியுது..
**சரவணன். ℳ**
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனாவா? கடவுளா?
**-லாக் ஆப்**�,”