rநாட்ல விஞ்ஞானிக்கா பஞ்சம்? :அப்டேட் குமாரு

entertainment

முன்னவெல்லாம் சொந்தக்காரங்க யாராச்சும் ஃபோன் பண்ணி பேசும்போது பையன் என்ன பன்றான்னு கேட்டா, அவன் வேலைக்கு போறான். வீட்ல இருக்க நேரமே இல்லைன்னு சொல்வாங்க அம்மா. இன்னைக்கு ஒருத்தங்க ஃபோன் போட்டு கேட்டப்ப, சனியன் இந்த கொரோனா வந்ததால வீட்லயே இருக்கான். அவன் தொல்லை தாங்க முடியல. நம்மளத்தான் டார்ச்சர் பண்றான்னு பாத்தா, தரைல ஒரு எறும்பு போய்க்கிட்டு இருக்கு. அது பின்னாடியே போய் எங்க போகுதுன்னு பாக்கப் போறேன்றான். வீட்ல எந்த இடத்துல எல்லாம் கிராக் விட்ருக்குன்னு பாத்து, பத்து வருசத்துக்கு முன்னாடி வீடு கட்டுன மேஸ்திரிகிட்ட ஃபோன் போட்டு கம்ப்ளைண்ட் பன்றான். இப்படியொரு லூசுப் பயலா புள்ளைய வளத்துருக்குறதை நினைச்சு எனக்கே கஷ்டமா இருக்கு’ அப்டின்றாங்க. இனிமேலும் ஏதாச்சும் பண்ணோம்னா ஹாஸ்பிடல்ல சேத்து விட்றுவாங்கன்னு பயந்து, மதியம் சாப்பாட்டுல உப்பு இல்லாததைக் கூட சொல்லாம சைலண்டா உக்காந்திருக்கேன். சோஷியல் மீடியாவுல கெடந்து இயல்பான மனிதனா இருக்க மறந்துட்டமோன்னு தோணுது. எதுக்கும் இளம் விஞ்ஞானி யார்கிட்டவாச்சும் பேசலாம்னு கூகிள்ள போட்டா வரிசையா பெரிய லிஸ்டே வருது. தண்ணிக்கும், பணத்துக்கும் தான் தமிழ்நாட்ல பஞ்சம் போல. மத்ததெல்லாம் அளவுக்கதிகமாவே கிடைக்குது. நீங்க அப்டேட்டை படிங்க.. நான் போய் பேசிட்டு வந்துடுறேன்.

**கனகாம்பரி**

பூனை மேல கொலவெறில இருக்கேன். என் கண்ணு முன்னாடியே ஒரு குருவிய புடிச்சு கொன்னுடுச்சு. பாவம் பறவை.. மனசு கஷ்டமா இருக்கு…

**வன தேவதை**

இத்தன அமளி துமளிலயும் வலைபாயுதே மோட்லயே சுத்தறவங்களுக்கு கருட புராணத்தின் படி ஏதாவது தண்டனை இருக்கா

**மயக்குநன்**

கொரோனாவுக்கு எதிரான போரில் சிக்கன நடவடிக்கையாக, 2 ஆண்டுகளுக்கு விளம்பரம் செய்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்!- சோனியா.

ஒருவேளை நிறுத்தினாலும், அதை தெரிவிக்கிறதுக்கே நூறு விளம்பரம் செய்வாங்களே ஜீ..?!

**மெத்த வீட்டான்**

இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்-டிரம்ப்

நீங்க பேசியதை நாங்களும் மறக்கமாட்டோம் தோழர் !

**கோழியின் கிறுக்கல்**

திருமணத்திற்கு முன்!

பெண்கள்:கங்கா

ஆண்கள்: பாட்ஷா

திருமணத்திற்கு பின்!

பெண்கள்: சந்திரமுகி

ஆண்கள்: மாணிக்கம்!!

**ℳsd ❝இதயவன்❞**

ஆபத்தை பையிலயே வைத்து கொண்டு தன் குடும்பத்தினரின்

மகிழ்ச்சியை பணயம் வைத்து எஞ்சியுள்ள உயிரை காக்க உயிரை கொடுக்கும் ஒவ்வொரு மருத்துவரும் சூப்பர் மேன் தான்..!!!

**mohanram.ko**

முழுக் காயையும் சாம்பாரில் அப்படியே போடுவது, ‘அரியாமல்’ செய்யும் தவறு

**மெத்த வீட்டான்**

தமிழ்நாட்டில்தான் அதிகமாக மருத்துவ கல்லூரிகள் இருக்கு..

அதைவிட அதிகமாக மருத்துவ குறிப்புகளும் இருக்கு !

**நாட்டுப்புறத்தான்**

டல்கோனா காபி செய்முறை

தலா 3டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபிதூள்,சீனி,வென்னீர் மூன்றையும் பேஸ்ட் பதத்திற்கு கலக்கி, பிரிட்ஜில் வைக்கவும். அரைலிட்டர் பாலைக் காய்ச்சி ஆறவிட்டு, டம்ளரில் ஊற்றி, அதன்மேல் காபி பேஸ்ட்டை போட்டு போட்டோ எடுத்து, டிவிட்டரில் அப்லோட் பண்ணபின், அதை கீழே ஊற்றிவிடவும்!

**மெத்த வீட்டான்**

ஊருக்கு ஊர் எல்லைகளை அடைக்குற கொடுமையான போர் நடந்துக் கொண்டிருக்கிறது !

**மாஸ்டர் பீஸ்**

வாழ்க்கையில நேர்மையா இருக்கறது ஒரு வித போதை அத அனுபவிச்சவங்க அதுல இருந்து மீண்டு வருவது கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்டம்!

நேர்மையால ஜெயிக்கும்போது வர பெருமிதம் இருக்கே அதான் போதைகளின் உச்சம்!

**சரவணன். ℳ**

“இப்ப மட்டுமில்ல, எப்பவுமே நமக்கு ஹட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்படாது!”

ஒருவேள, அப்படி தட்டுப்பாடு ஏற்பட்டுச்சுன்னா…?

கோமியம் இருக்குல்ல…!கலக்கி குடுத்துட வேண்டியது தான்…

-லாக் ஆஃப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *