சிவகார்த்திகேயன் – அனிருத் கூட்டணியின் சேட்டை ‘செல்லம்மா’!

Published On:

| By Balaji

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘ஹீரோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று (ஜூலை 16) இரவு வெளியானது. வித்தியாசமான அறிவிப்புடன் வெளியான இந்தப் பாடல் வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

பாடல் துவங்குவதற்கு முன்னதாக ‘எந்த மாதிரி பாடல் வேண்டும்’ என அனிருத் கேட்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் **‘வேற லெலவில் ஹிட் ஆகணும் சார். டிக் டாக்கில் மில்லியன், பில்லியன்னு போகணும் சார். டிக் டாக்க திறந்தா நம்ம பாட்டு தான் இருக்கணும் சார்’** என சொல்கிறார். ‘அதுக்கு முதல்ல டிக் டாக் இருக்கணுமே சார்’ என்று அனிருத் பதிலளிக்கிறார். தொடர்ந்து டிக் டாக் தடை பற்றியே பாடல் உருவாக்கலாம் என்று கூறி இந்த ‘செல்லம்மா’ பாடலை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

*இனிமே டிக் டாக் எல்லாம் இங்க பேனுமா*

*நேரா டூயட் பாட வாயேன்மா*

*ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததெல்லாம் போதும்மா*

*கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசுமா*

*செல்லம்மா, செல்லம்மா*

*அங்கம் மின்னும் தங்கம்மா*

*பொன்னம்மா மெல்லம்மா கட்டிகலாமா?*

*கண்ணம்மா கண்ணம்மா*

*கண்ணு ரெண்டும் கன் அம்மா*

*கொஞ்சமா கொஞ்சிமா சுட்டுத்தள்ளேன்மா*

*பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே*

*தடுத்தாலும் உனக்கே வீழுவேன் நானே*

*கண்ணாடி மனச கல்வீசி பாத்தாயே*

*உடைஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே*

என்பதாக அனிருத் இசையில் அமைந்திருக்கும் பாடலின் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ஜோனிதா காந்தியுடன் இணைந்து அனிருத் பாடியுள்ள ‘செல்லம்மா’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share