தமிழகத்தில் சமீப நாட்களாக பல விவாதங்களுக்கும் வித்திட்டிருக்கும் மூன்று விவகாரங்கள் குறித்து ஒரே ட்வீட்டில் கண்டனம் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் தமிழக மக்கள் பலரையும் அதிருப்தி அடைய செய்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக பலரும் கண்டனக் குரல்கள் எழுப்பி வந்த அதே நேரத்தில் தமிழகத்தில் வேறு சில விஷயங்களும் விவாதமாக மாறியது. முருகக்கடவுளை இழிவுபடுத்தும் விதமாக கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சனம் செய்து வெளியிடப்பட்ட வீடியோ பெரும் பிரச்னையாக மாறி பலரையும் கொந்தளிக்க செய்தது. அதேபோன்று கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட விவகாரமும் விவாதமாக மாறியது.
இந்த மூன்று விவகாரங்களுக்கு எதிராகவும் அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் எனப்பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த மூன்று விஷயங்களையும் குறிப்பிடும் விதமாக கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப்
பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.பெரியார் இழிவு செய்யப்படுவதைச்
சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள்
காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.#Thirukkural #Tamil #Periyar— வைரமுத்து (@Vairamuthu) July 18, 2020
அந்தப் பதிவில், ** “திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப் பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரியார் இழிவு செய்யப்படுவதைச் சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள் காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”** என்று அவர் தனக்கே உரிய பாணியில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”