ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதேபோல் கதாநாயகிகளின் பங்களிப்பும் மிக முக்கியம். கதாநாயகிகளின் பங்களிப்பு தான் திரைப்படங்களுக்கு பப்ளிசிட்டியாகி ரசிகர்களை கவர்கிறது.
நடிகைகள் தங்கள் அழகையும் செயல்திறனையும் கொண்டு அவர்கள் நடிக்கும் படத்தை உற்சாகப்படுத்துவது இப்போது பொதுவானது. சில சமயங்களில் நடிகைகள் அறுவை சிகிச்சையால் தங்கள் அழகை தாங்களாகவே சேதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தாலும் அழகு சார்ந்த சில அறுவை சிகிச்சை மற்றும் ஒப்பனை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சினிமாவில் தனது இடத்தினை தக்கவைத்து கொண்டு ரசிகர்களை கவர்கின்றனர். அப்படி ஒப்பனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த இந்தியாவின் முன்னணி நடிகைகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்:
ஸ்ரீதேவி கபூர்
தென்னிந்திய சினிமாவின் மூலம் இந்தியா அளவில் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி கபூர். பின்னர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்.
ஸ்ரீதேவி 90-களில் நாசி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார், பின்னர் ஃபேஸ்லிஃப்ட், போடோக்ஸ் போன்ற ஒப்பனை அறுவை சிகிச்சை செய்தார். அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உதட்டை அழகுப்படுத்தும் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
சமந்தா
டோலிவுட், கோலிவுட் என தென்னிந்திய பியூட்டி சமந்தா மூக்கு, கன்னம் மற்றும் லிப் ஃபில்லர்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இவர் தமிழில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி போன்ற திரைப்படங்களில் நடித்து அறிமுகமானவர். தற்போது தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு முன்னணி நடிகையாக இருக்கிறார். அண்மைக்காலமாக உடல் சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ருதி ஹாசன்
மூக்கு மற்றும் உதடு அறுவை சிகிச்சை செய்த ஸ்ருதிஹாசன் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளர். தான் பிளாஸ்டிக் சர்ஜரியை ஊக்குவிக்கவில்லை, அதற்கு எதிராகவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதாகவும் அதேநேரம் நான் எப்படி வாழ வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அனுஷ்கா ஷர்மா
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா உதட்டை அழகுப்படுத்தும் சிகிச்சையை செய்துள்ளார். வோக் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஷில்பா செட்டி
கர்நாடகாவிலிருந்து குடிபெயர்ந்து பாலிவுட் திரையுலகில் தனது அடையாளத்தினை படைத்த மங்களூரு பெண் ஷில்பா ஷெட்டி, நாசி அறுவை சிகிச்சை செய்து தனது அழகை மேம்படுத்தியுள்ளார். எனது மூக்கை கூர்மையாக்குவதன் மூலம் நான் அழகாக தெரிவதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்