தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகும் நடிகை!

Published On:

| By Balaji

மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் சுராஜ், நிமிஷா சஜயன் நடிப்பில் நீ ஸ்ட்ரீம் எனும் ஓடிடியில் நேரடியாக வெளியான படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் வெற்றிக்குக் காரணம் படத்தின் கரு தான். பழைமை வாத கொள்கை கொண்ட வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் நாயகி சந்திக்கும் சிக்கல்களும், அதை உடைத்தெறியும் இடமுமாக படம் பட்டாஸாக இருக்கும்.

இந்தப் படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்குநர் கண்ணன் இயக்குகிறார். படத்தில் முன்னணி நாயகியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை சில நாட்களாக நடந்து வந்தது. இறுதியாக, படத்தில் நிமிஷா சஜயன் ரோலில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு வெர்ஷனிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பார் என்றே தெரிகிறது.

தமிழ் பேசத்தெரிந்த நடிகையைத் தேர்ந்தெடுத்திருப்பதால் ஒரிஜினாலிட்டியாக இருக்கும் என்றே பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இந்த இடத்தில் காக்கா முட்டை, கனா என வித்தியாசமான ரோல்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

**- தீரன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share