தனுஷ் குரலில் வெளியாகும் மாறன் முதல் பாடல்!

Published On:

| By Balaji

கடந்த ஒரு வார காலமாக நடிகர் தனுஷ் – ஜஸ்வர்யா விவாகரத்து செய்தி ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது கதைகள் வெளிவந்து கொண்டிருக்கிற பரபரப்பான சூழ்நிலையில் நாளை (ஜனவரி 26) மாறன் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்த மாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான ‘பொல்லாத உலகம்’ பாடலை குடியரசு தினத்தையொட்டி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள பாடலை தனுஷும் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

**அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share