eகங்கனாவுக்கு பதில் கொடுத்த ஆலியா பட்!

Published On:

| By Balaji

பாலிவுட்டில் நடைபெறும் உரசல்களும், சீண்டல்களும் ரசிகர்களுக்குப் புதிதல்ல. ஆனால், நேரடியாக நடிகைகளுக்குள் நடைபெறும் சண்டைகள் எப்போதுமே விரும்பத்தக்க வகையில் அமைவதல்ல. அப்படிப்பட்ட சூழலைத்தான் தற்போது கங்கனா ரனாவத்-ஆலியா பட் ஆகிய இருவரும் உருவாக்கியிருக்கின்றனர்.

ஜோயா அக்தர் இயக்கத்தில் ரன்வீர், ஆலியா பட் ஆகிய இருவரும் நடித்திருக்கும் திரைப்படம் குல்லி பாய். இந்தத் திரைப்படத்தில் ஆலியா பட் நடித்துள்ள சஃபீனா கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆலியாவின் நடிப்பை, மணிகர்னிகா திரைப்படத்தில் கங்கனாவின் நடிப்புடன் ஒப்பிட்டு சில மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து கங்கனாவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது “என்னுடன் ஆலியாவின் நடிப்பை ஒப்பிட்டு என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள். என்னுடன் ஒப்பிட ஆலியாவின் கேரக்டரில் என்ன இருக்கிறது. சினிமாவின் சிறு பிள்ளைகளை தலையில் தூக்கிவைத்து ஆடுவதை நிறுத்தவேண்டும். மிகவும் சாதாரணமான நடிப்பை பாராட்டுவதை நீங்கள் நிறுத்தினால் தான் நடிப்பின் தரம் உயரும்” என்று கங்கனா கருத்து கூறியிருந்தார்.

கங்கனாவின் கருத்துக்கு தற்போது ஆலியா வெளியிட்டுள்ள பதில் கருத்தில் “கங்கனாவின் கருத்து அவருடைய கருத்து. அது அப்படியே இருக்கட்டும். அவருடைய நடிப்பை நான் பெரிதும் மதிக்கிறேன். அதேசமயம் ராசி படத்துக்காக என்னை எத்தனைமுறை அழைத்து அவர் பாராட்டினார் என்பது எனக்கு இப்போது வரை நினைவிருக்கிறது. இன்னொரு முறை அவர் அப்படி பாராட்டும் அளவுக்கு நடிக்கவேண்டியது என் கடமை” என்று ஆலியா கூறியிருக்கிறார்.

மிகவும் சாதாரணமான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்துபவர் ஆலியா என்ற கங்கனாவின் கமெண்டுக்கு, மிகவும் நாகரிகமான முறையில் ஆலியா பட் வெளிப்படுத்தியுள்ள பதிலுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்திருக்கிறது.

**-சிவா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share