குடும்பத்துடன் சந்தித்துக்கொண்ட மின்னல் முரளிகள்!

Published On:

| By Balaji

மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சத்துடன் மின்னல் முரளி என்கிற படம் வெளியானது.

இந்த படத்தில் சூப்பர்மேன் பவர் கொண்ட மின்னல் முரளி கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் நடித்திருந்தனர். இதில் குரு சோமசுந்தரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றார். இவருக்கு இந்த படத்தின் வெற்றியால் தமிழிலும் மலையாளத்திலும் அதிக பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.

இந்நிலையில் இரண்டு மின்னல் முரளிகளும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். டொவினோ தாமஸ் வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் குரு சோமசுந்தரம். இதுபற்றி தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்துள்ளனர்.

குரு சோமசுந்தரம் இந்த சந்திப்பு பற்றி கூறுகையில், “இன்று ஜெய்சனும் ஷிபுவும் சந்தித்துக்கொண்டனர். ஜெய்சன் வீட்டில் எங்களுக்கு அன்பான வரவேற்பும் அருமையான உணவும் கிடைத்தது. இதனால் ஜெய்சன் மீது இருந்த பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு, நான் நல்லவனாக திருந்தி விட்டேன்” என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

இந்தப்படத்தில் ஜெய்சன் ஆக டொவினோ தாமஸும் ஷிபுவாக குரு சோமசுந்தரமும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share