தீபாவளி பண்டிகைக்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் அண்ணாத்த படத்துடன் போட்டிபோடும் ஒரே படம் எனிமி.
விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள ஆக்சன் படம். இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். மிர்னாளினி ரவி, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா , கருணாகரன் மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது
மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பால்ய பருவத்தில் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருக்கும் இருவர் வளர்ந்த பிறகு எதிர் எதிர் துருவங்களாக அதாவது ஒருவர் போலீஸ் அதிகாரியாகவும், ஒருவர் சர்வதேச கிரிமினலாவும் மாறி தொழில் ரீதியாக மோதிக் கொள்கிற திரைக்கதைதான் எனிமி என்கிறது இயக்குநர் வட்டார தகவல்.
இந்த படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. முதலே ரஜினி நடித்த அண்ணாத்த படத்துக்கு பெரும்பாலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இந்த படத்திற்கு தியேட்டர்கள் மறுக்கப்படுவதாகவும் எப்படி இருந்தாலும் படத்தை தீபாவளிக்கு வெளியிட்டே தீருவேன் என்றும் தயாரிப்பாளர் வினோத்குமார் ஆடியோ பதிவு ஒன்றில் கூறியிருந்தார்.
இருந்தபோதிலும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடைசி நேரத்தில் பின்வாங்க கூடும் என்கிற தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது ஏரியாவுக்கும் எனிமி படத்தின் விநியோகஸ்தர்கள் பெயரை அறிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தயாரிப்பு தரப்பு தற்போதைய நிலவரப்படி மதுரை ஏரியாவில் 35 திரையரங்குகளும், திருச்சி ஏரியாவில் 30 திரையரங்குகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
**-இராமானுஜம்**
�,