dதேர்தலை ரகளையாக காட்டிய சினிமாக்கள்!

Published On:

| By Balaji

தமிழகமே பரபரக்கும் தேர்தல் களத்தில் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியிருக்கின்றன. தமிழக தேர்தல் கலாச்சாரத்தை ரகளையோடு காட்சிப் படுத்திய முக்கிய சில படங்களும் இருக்கின்றன. அப்படி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தத் தேர்தல் சினிமாக்களை ஒரு ரிவைண்ட் செய்துவிடலாம்.

**அமைதிப்படை**

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பொலிட்டிகல் நையாண்டி சினிமா அமைதிப்படை. மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் 1994ல் வெளியானது. தேங்காய் பொறுக்கும் அமாவாசை கையில் ஆட்சி அதிகாரம் வந்தால் ? இதுவே ஒன்லைன். முன்னாள் எம்.எல்.ஏ. மணிவண்னன் மூலமாக அம்மாவாசை எப்படி நாகராஜ சோழன் எம்.எல்.ஏ-வாக மாறுகிறார், அதன்பிறகு நடக்கும் அரசியலை நக்கலாக திரைக்கதையாக்கியிருப்பார் மணிவண்ணன். காட்சிக்கு காட்சி அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் வெளுத்து வாங்கியிருக்கும் அமைதிப்படை. தேர்தல் முடிவு அறிவிக்கும் நேரம், சத்யராஜ் நாற்காலியில் அமரும் காட்சியே ஒட்டுமொத்த படத்துக்குமான ஒற்றை சாம்பிள்.

**முதல்வன்**

‘ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப் பாரு, அப்போ தெரியும்? ’ என ஒரு பேச்சுக்கு ரகுவரன் கேட்க, நிஜமாகவே ஒரு நாள் முதல்வராகிவிடுவார் அர்ஜூன். கமர்ஷியலாக செம ஹிட். அரசியல் தலைவர்களின் நேர்காணல்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய படம் முதல்வன். தொலைக்காட்சி கேமிரா மேன் அரசியலுக்கு வந்தால்? தேர்தலில் நின்றால் எப்படியிருக்கும் என பேசியிருக்கும் படம்.

**ஆயுத எழுத்து**

மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், த்ரிஷா, மீரா ஜாஸ்மீன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஆயுத எழுத்து. புதுமையான திரைக்கதையுடன் மூன்று கதைகளைச் சொல்லியிருப்பார்கள். மூன்று கதைகளும் மைக்கேலின் (சூர்யா) பொலிட்டிகலில் வந்து சேரும். அரசியலுக்குள் இளம் தலைமுறை வந்தால் எப்படியிருக்கும் என்பதை மையமாகக் கொண்டு படம் உருவாகியிருக்கும். சூர்யாவின் தேர்தல் பிரச்சாரம், வில்லனான மாதவனை சமாளிக்கும் இடம், அரசியல் வாதியாக பாரதிராஜா என கமர்ஷியலாக படம் உருவாகியிருக்கும்.

**கோ**

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான படம் கோ. தின அஞ்சல் பத்திரிகையாளரில் துவங்கி தீவிரவாதி வரை கதை செல்லும். இது பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர். அஜ்மல் அரசியல் கட்சியைத் துவங்கி, ஆட்சி அதிகாரத்துக்கு வர என்னவெல்லாம் செய்கிறார், அதே ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தீவிரவாதிகளுக்கு உதவுவார். இவற்றையெல்லாம் ஹீரோ ஜீவா எப்படி தடுத்து நிறுத்துகிறார் என கதை நகரும். கே.வி.ஆனந்த் படங்களிலேயே கமர்ஷியல் ஹிட் கொடுத்தப் படங்களில் இதுவும் ஒன்று.

**கொடி**

தனுஷ், த்ரிஷா நடிப்பில் 2016 தீபாவளிக்கு வெளியான படம் கொடி. அரசியல்வாதியாக வேண்டுமென லட்சியத்துடன் வளர்கிறார்கள் தனுஷூம், த்ரிஷாவும். தனுஷின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத த்ரிஷா, தனுஷைக் கொன்று விடுகிறார். அதனால், தம்பி தனுஷ் அரசியலுக்குள் வருகிறார். அண்ணனைக் கொன்றவர்களை கண்டுபிடிப்பதாக கதை நகரும். கொடி படத்திலும் அரசியல் தேர்தல் களத்தை அழகாகக் காட்டியிருப்பார்கள்.

**சர்க்கார்**

ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் சர்க்கார். ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்கும் தேர்தல் முறையீடுகளைப் பேசியிருக்கும் படமிது. கார்ப்பரேட் கிரிமினலான விஜய் ஓட்டுப் போட சென்னை வருகிறார். ஆனால், அவரின் ஓட்டை கள்ள ஓட்டுப் போட்டுவிடுகிறார்கள். ஈகோ பற்றிக் கொள்ள அரசியலுக்குள் இறங்குகிறார். அரசியல்வாதிகளுடனான நீயா நானா போட்டி தான் சர்க்கார்.

**நோட்டா**

விஜய்தேவரகொண்டா தமிழில் அறிமுகமான படம் ‘நோட்டா’. தமிழக முதல்வரான தந்தை நாசர் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்ததால், அரசியலே தெரியாத மகனை முதல்வராக்குகிறார். எதிர்கட்சிகள் சாதகமாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு கொலையும் நடந்துவிடுகிறது. அரசியலில் கற்றுத் தேர்ந்து, விஜய்தேவரகொண்டா ஸ்கோர் செய்தாரா என்பதே மீதிக் கதை. முதல் நாள் பார்ட்டி பாய், அடுத்த நாளே முதல்வர் எனும் ஒன்லைன் தான் படத்தின் சுவாரஸ்யத்துக்கு காரணம். ரிசார்ட் டீலீங், கறுப்புப் பணம், தற்காலிக முதல்வர் கூத்துகள் மற்றும் ஆஸ்பத்திரி சி.சி.டி.வி என நடப்பு அரசியலைப் படம் பேசியிருக்கும்.

**என்.ஜி.கே. **

செல்வராகவனின் அரசியல் படமே என்.ஜி.கே. சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. அரசியலில் சாதிக்க நினைக்கும் நாயகனுக்கு திரும்பும் இடமெல்லாம் சிக்கல். அரசியல்வாதி ஒருவரிடம் எடுபிடியாகச் செல்கிறார் நாயகன் சூர்யா. அதன்பிறகு, பெரிய அரசியல்வாதியாக மாற சூர்யா செய்த வேலைகளே படம். செல்வராகவன் ஸ்டைலில் ஒரு பொலிட்டிகல் படம். இதற்குள் நடப்பு அரசியலையும் இறக்கிவிட்டிருப்பார். ஆனால், படம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாவில்லை.

– ஆதினி

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share