நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் புதிய இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு 120 நாட்கள் கடந்துவிட்டது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இதே நிலை தான் தொடர்ந்து வருகிறது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடர முடியாமல் ஏராளமான படங்கள் பாதியில் முடங்கிப் போயிருக்கும் நிலையில், முழுமையடைந்த திரைப்படங்களையும் திரையரங்கில் வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.
மீண்டும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT தளங்களில் தங்கள் படைப்புகளை படக்குழுவினர் நேரடியாக வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு முதலுக்கு முடக்கம் இல்லாத வகையில் வருமானம் ஈட்ட அவர்கள் வழி தேடி வருகின்றனர்.
அந்த வகையில் 17 இந்தியப் படைப்புகளின் டிஜிட்டல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று(ஜூலை 16) வெளியிடப்பட்டது.
???????????? We’re all set to drop 17 upcoming originals! Are you excited or ARE YOU EXCITED?! ????????????@WeAreNetflix pic.twitter.com/C7g6Iob0Cg
— Netflix India (@NetflixIndia) July 16, 2020
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியல்:
**Gunjan Saxena**
நடிப்பு- ஜான்வி கபூர், பங்கஜ் த்ரிபாதி
இயக்கம்- சரண் ஷர்மா
**Torbaaz**
நடிப்பு- சஞ்சய் தத், நர்கிஸ் ஃபக்ரி
இயக்கம்- கிரிஷ் மாலிக்
**Dolly Kitty Aur Woh Chamakte Sitare**
நடிப்பு- பூமி பட்னேக்கர், கொங்கொனா சென் ஷர்மா
இயக்கம்- அலங்க்ரிதா ஸ்ரீவத்ஸவா
**Raat Akeli Hai**
நடிப்பு- நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே
இயக்கம்- ஹனி தெஹ்ரான்
**Ludo**
நடிப்பு- அபிஷேக் பச்சன், ராஜ்குமார் ராவ், ஆதித்ய ராய் கபூர், ஆஷா நேகி
இயக்கம்- அனுராக் பாசு
**Class Of 83**
நடிப்பு- போபி டியோல், ஸ்ரேயா சரண், புல்கித் சாம்ராட்
இயக்கம்- அதுல் சபர்வால்
**Ginny Weds Sunny**
நடிப்பு- யாமி கெளதம், விக்ராந்த் மாசே
இயக்கம்- புனீத் கன்னா
**A Suitable Boy**
நடிப்பு- தபு, தன்யா மணிக்தலா, இஷான் கட்டர்
இயக்கம்- மீரா நாயர்
**Mismatched**
நடிப்பு- ப்ரஜக்தா கோலி, ரோஹித் சராஃப்
**AK vs AK**
நடிப்பு- அனுராக் காஷ்யப், அனில் கபூர்
இயக்கம்- விக்ரமாதித்ய மோத்வானே
**Serious Men**
நடிப்பு- நவாசுதீன் சித்திக்
இயக்கம்- சுதீர் மிஷ்ரா
**Tribhanga**
நடிப்பு- கஜோல், தான்வி ஆஸ்மி, மிதிலா பால்கர்
இயக்கம்- ரேணுகா ஷஹானே
**Kaali Khuhi**
நடிப்பு- ஷபானா ஆஸ்மி, சத்யதீப் மிஷ்ரா, ரிவா அரோரா
**Bombay Rose**
open Venice Critics’Weekஇல் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம்
**Bhaag Beanie Bhaag**
நடிப்பு- ஸ்வரா பாஸ்கர், ரவி படேல், டோலி சிங், வருண்
**Bombay Begums**
நடிப்பு- பூஜா பட், அம்ருதா சுபாஷ், ஷஹானா கோசுவாமி, ஆதித்யா ஆனந்த்
**Masaba Masaba**
நடிப்பு- மஸாபா குப்தா மற்றும் நீனா குப்தா
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”