பாபநாசம் ஒரிஜினலான த்ரிஷ்யமின் பாகம் 2-வில் என்ன எதிர்பார்க்கலாம்!

entertainment

மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் த்ரிஷ்யம் 2 படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. மோகன்லால், மீனா நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக மலையாள மொழியில் வெளியான படம் த்ரிஷ்யம். இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மலையாள திரையுலகில் 50 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்த முதல் படம் த்ரிஷ்யம் தான். 2013ல் வெளியான இப்படம் 150 நாட்கள் வரை திரையரங்கில் ஓடியது. அதோடு, கேரள அரசின் மாநில விருதினையும் பெற்றது.

மலையாளம் மட்டுமின்றி, கன்னடத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடிப்பில் ‘த்ரிஷ்யா’ எனவும், தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிப்பில் ‘திருஷ்யம்’ எனவும், இந்தியில் அஜய்தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் ‘த்ரிஷ்யம்’எனவும் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ‘பாபநாசம்’ எனவும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

இத்தனை பெருமைமிக்க த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாகிவிட்டது. கடந்த ஜனவரி 1ஆம் தேதி படத்திற்கான டீஸர் வெளியானது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதோடு, நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, மகள்களாக நடித்த அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் உள்ளிட்டவர்களே இப்படத்திலும் நடித்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தின் கதை இதுதான். ஜார்ஜ்குட்டி (மோகன்லால்) ஊருக்குள் கேபிள் சர்வீஸ் கொடுத்துவருகிறார். அவரின் மூத்த மகளிடம் தவறாக நடந்துகொள்ளும் வருணை, மகளும், மீனாவும் சேர்ந்து கொன்று விடுகிறார்கள். அந்த கொலையை மறைக்க ஜார்ஜ் குட்டி செய்த விஷயங்கள் என்னென்ன? அந்த கொலை வழக்கிலிருந்து ஜார்ஜ்குட்டி குடும்பம் எப்படி தப்பித்தது என்பதே கதை.

உண்மை ஒருபோதும் மறைந்து இருக்காது என்பதை மனதில் கொண்டு இரண்டாவது பாகம் உருவாகியிருக்கிறதாம். கொலை செய்யப்பட்ட வருண் என்ன ஆனான், எங்கு புதைக்கப்பட்டிருக்கிறான் என்பது ஜார்ஜ் குட்டிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அந்த ரகசியம் உடையாமல் காப்பாற்ற மோகன்லால் என்ன செய்யப் போகிறார் என்பதை மிஸ்ட்ரியுடன் இரண்டாம் பாகத்தில் கூறியிருக்கிறார்களாம்.

எட்டு வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. இப்படம் ரீமேக் செய்யப்பட்ட பிற மொழிகளிலும் பெரிய ஹிட்டானது. ஆக, த்ரிஷ்யம் 2 ஹிட்டானால், தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் 2 எதிர்பார்க்கலாமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும்.

**[டிரெய்லர் லிங்க்](https://www.youtube.com/watch?v=0f-nd1uGsjQ)**

**-ஆதினி **�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *