Kகல்லூரி கதைக்களத்தில் டான்!

Published On:

| By Balaji

டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் தயாராகி வரும் படம் டான். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங்கை முடித்துள்ள சிவகார்த்திகேயன், ‘அடாத மழையிலும் விடாது டப்பிங் நிறைவு’ எனத் தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் கல்லூரி மாணவர் போன்று சிவகார்த்திகேயன் சற்றே உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இந்த படமே கல்லூரி கதைக்களத்தில் மாணவர்கள் – பேராசிரியர்கள் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகிவரும் டான் என்பது தெரிகிறது.

**-அம்பலவாணன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel