Yஉலகளவில் சாதனை படைத்த தமிழ் படம்!

Published On:

| By Balaji

இணைய வழியிலேயே திரைப்படங்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் காணும் வசதி ‘ஓவா் தி டாப்’ (ஓடிடி) என்றழைக்கப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாகத் திரையரங்குகள் நீண்டகாலம் மூடப்பட்டதால் புதிய படங்கள் குறிப்பிட்ட காலத்தில் வெளியிட முடியாமல் முடங்கியது. அதற்கு மாற்றாகத் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு புதிய வணிகம் உருவானது.

பொது முடக்கத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்ததன் காரணமாக ஓடிடி தளங்களில் படம் பார்க்கத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், top10.netflix.com என்கிற புதிய இணையத்தளத்தைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் அதிக மணி நேரம் பார்க்கப்படும் படங்களின் டாப் 10 பட்டியலை இந்த இணையத்தளத்தில் வெளியிடுகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் எந்தப் படம், எந்த வலைதள தொடர் அதிக மணி நேரம் பார்க்கப்பட்டது என்கிற தகவலையும் இதன்மூலம் அறிய முடியும்.

இதன்படி நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை முதல்10 இடங்களைப் பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் ரெட் நோட்டீஸ் படம் அதிக மணி நேரம் பார்க்கப்பட்டு (148.72 மில்லியன் மணி நேரம்) முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

படங்கள் அல்லாத இணையத்தொடர்களில் நார்கோஸ் மெக்ஸிகோ – பருவம் 3 முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய அளவிலும் ரெட் நோட்டீஸ் படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள படங்களின் பட்டியலில் ஒரே ஒரு தமிழ்ப் படம் இடம்பிடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்துக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

டாக்டர் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு 5-ம் இடம் கிடைத்துள்ளது.

டாக்டர் படம் இரு வாரங்களாக முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள பட்டியலில் உள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளிலும் 10 படங்கள் பட்டியலில் டாக்டர் படம் இடம்பிடித்துள்ளது.

இந்திய அளவில் இணையத்தொடர்களில் ஸ்குவிட் கேம் – முதல் பருவத்துக்கு முதல்

இடம் கிடைத்துள்ளது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share