~இதை பயன்படுத்த வேண்டாம்: ஹைடனிடம் கெஞ்சிய தோனி

entertainment

சிறிய பேட்டை பயன்படுத்த வேண்டாம் என்று எம்.எஸ். தோனி தன்னிடம் கெஞ்சியதாக ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

மேத்யூ ஹைடன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் ஆவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடிய இவருக்கு சென்னையில் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஐபிஎல்-லில் டெல்லி அணிக்கு எதிராக ‘மங்கூஸ்’ பேட்டை பயன்படுத்தி ஆடிய இன்னிங்ஸை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த குட்டி பேட்டில் கைப்பிடி நீளமாகவும், பந்தை எதிர்கொள்ளும் பகுதி நீளம் குறைவாகவும் இருந்தது.

அந்த சீஸன் முழுவதும் ஹைடனின் இந்த பேட் பிரபலமாக பேசப்பட்டது. ஆனால் மங்கூஸ் பேட் மூலம் ஹைடன் ஆடுவதை எம்.எஸ்.தோனி விரும்பவில்லை என்று ஹைடன் நினைவு கூர்ந்துள்ள வீடியோ சென்னை அணியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஹைடன் கூறியதாவது, தோனி தன்னிடம் நீங்கள் வாழ்வில் மங்கூஸ் பேட்டை பயன்படுத்தாமல் இருப்பதற்கு என்ன வேண்டுமானலும் தருகிறேன் என கூறினார். அதற்கு, நான் ஒரு வருட காலமாக இந்த பேட்டில் பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும், அது மட்டுமின்றி பேட்டின் நடுப்பகுதியில் பந்து பட்டால் 20 மீட்டர் தூரம் கூடுதலாக பறக்கும். அதனால் கவலைப்படாதீர்கள். மங்கூஸ் பேட்டை நான் பயன்படுத்தியது, துணிச்சலான முடிவு. இந்த பேட்டுடன் உற்சாகமாக ரசித்து விளையாடினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஐ.பி.எல். போட்டியில் ஹைடன் 16 ஆட்டங்களில் 346 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் சென்னை அணி இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *