சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டது: டாணாக்காரன் குறித்து தமிழ்

entertainment

வெற்றிமாறனின் துணை இயக்குநர், ‘ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் எஸ்.ஐயாக நடித்து படம் பார்த்தவர்களை நடுங்கவைத்த தமிழ் இயக்கியிருக்கும் படம் ‘டாணாக்காரன்’.

மோசமான போலீஸாக நடித்தவரே போலீஸைப்பற்றி இயக்கியிருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய டாணாக்காரன் வலைத்தளத்தில் வெளியானது .

நாம பாதிக்கப்பட்டு புகார் கொடுக்கப்போகும்போது, அங்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இருந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்குமல்லவா?’ என்ற கேள்வியுடன், தன் அப்பாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு, நேர்மையான போலீஸ் ஆகவேண்டும் என்ற வெறியோடு காவலர் பயிற்சி பள்ளிக்கு வருகிறார் அறிவழகன் (விக்ரம் பிரபு).

பயிற்சிகளத்தில் காவல் பயிற்சியாளர்களால் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தாம் ’டாணாக்காரன்’ கதைக்களம்.
காவலர் பயிற்சிப்பள்ளியில் நடக்கும் அவலங்களைப் பற்றிய படம் ஒரே இடத்தில் மட்டுமே நடக்கும் திரைக்கதையை விறுவிறுப்பாக இயக்கியிருந்தார் தமிழ் . தமிழ்நாட்டு காவல்துறையில் பணிபுரிந்தவர் தமிழ் சினிமா ஆசையில் வேலையை துறந்து நீண்ட போராட்டத்துக்கு பின் டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குநரான தமிழ் சொந்த அனுபவங்களே திரைக்கதையாகும் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட டாணாக்காரன் படத்தின் மையக்கதை காவலர் பயிற்சி பள்ளி அவலங்கள்தான் .

அந்தப் படத்தை தமிழ்நாட்டில் தற்போது இயங்கி கொண்டு இருக்கும் 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் டாணாக்காரன் திரையிடலுக்கு படத்தின் இயக்குநர் தமிழ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். அது சம்பந்தமாக தமிழ் கூறுகிறபோது
‘படம் பார்த்து விட்டு காவலர் பயிற்சியில் உள்ள காவலர்களுடன் உரையாடும் வாய்ப்பை நிர்வாகம் எனக்கு அளித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இறுதியாக அங்கிருந்து கிளம்பும் போது அங்கு இருந்த முதன்மை அதிகாரியிடம் டாணாக்காரன் திரைப்படத்தை ஏன் திரையிடல் செய்கிறீர்கள் என்று நான் கேட்ட போது ” எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மக்களுக்காக உழைக்க நினைக்கும் காவலர்கள் இந்த சிஸ்டத்திற்க்குள் வர வேண்டும் என நீங்க சொன்ன செய்தி இந்த பசங்களுக்கு போய் சேர வேண்டும் என்று காவல் துறை தலைவர் சொன்னார். அவர் சொன்ன போது கொஞ்சம் அதிர்ச்சியாகி தான் நின்றேன்…. டாணாக்காரன் திரைப்படதிற்கு காவல் துறையில் இருந்து வந்த பாராட்டையும் திரையிடலையும் மிகவும் உயர்வாக எண்ணுகிறேன் டாணாக்காரன் யாரிடம் போய் சேர வேண்டுமோ அவர்களுடன் போய் சேர்ந்து விட்டதாகவே உணர்கிறேன்” என்றார் இயக்குநர் தமிழ்.

**- அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.