Wவடிவேலு குறித்து மாரி செல்வராஜ்

நடிகர் வடிவேலுவை வைத்து முதன் முறையாக படம் இயக்குவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் மனம் திறந்துள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ பட வெற்றிகளுக்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ், தனது மூன்றாவது படம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘மாமன்னன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வழங்குகிறது. நடிகர் வடிவேலுவின் பெயரை போஸ்டரில் முதன்மையாக கொண்டு, பிறகு உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பஃஹத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் பட தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டு, பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியது.

வடிவேலுவுடன் உதயநிதி, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன் முறையாக நடிக்கின்றனர். வடிவேலுவை இயக்குவது குறித்து மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வடிவேலுவுடனான புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “நிறைவேறிய தொடர் கனவு. மாமன்னனில் வைகைப்புயல்’ என்று தெரிவித்துள்ளார்.

அதே போல, இந்த படத்தில் முதன் முறையாக மாரி செல்வராஜ் ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்ற உள்ளார். இதற்கு முன்பு மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணனே இசையமைத்தார். இதனால் மாரி செல்வராஜ் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி என்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படம் குறித்தான அறிவிப்பு வந்தவுடன் சந்தோஷ் நாராயணன் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ட்வீட் செய்தார். அதில், “இது நிச்சயம் சிறப்பான ஒரு படமாக இருக்க போகிறது. ரஹ்மான் சார், உதயநிதி சார் மற்றும் என் அன்புக்குரிய மாரி செல்வராஜ் அனைவருக்கும் வாழ்த்துகள்” என கூறியிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts