இயக்குநர் சங்க தேர்தலுக்கு அனுமதி மறுப்பு!

Published On:

| By Balaji

கொரோனா பரவல் காரணமாகத் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலை நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து, நிலைமை சீரடைந்த பிறகு தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தலை வரும் 25/01/2022 அன்று நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டு, தேர்தலை நடத்துவதற்கு உரிய அனுமதியைப் பெறுவதற்கு மாநகராட்சியிடமும், காவல்துறையினரிடமும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கோரியது. ஆனால், மாநகராட்சியும், காவல்துறையும் கொரோனா தொற்று சென்னையில் கடுமையாக இருப்பதைச் சுட்டிக் காட்டி அனுமதியை மறுத்துள்ளனர். எனவே, தேர்தல் நடத்தும் தேதி நிலைமைகள் சீரடைந்த பிறகு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அரசு அறிவித்ததால் ஜனவரி 23ஆம் தேதி நடப்பதாக இருந்த சங்க தேர்தல் ஜனவரி 25ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share