?அமீரின் அடுத்த முயற்சி!

entertainment

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என வித்தியாசமான படங்களை இயக்கியவர் அமீர் கதாநாயகர்களின் மீது இருந்த கோபம் காரணமாக நானே கதாநாயகனாக நடிக்கிறேன் என சுப்பிரமண்யம் சிவா இயக்கத்தில் யோகி படத்தில் நடித்தார். படம் வெற்றிபெறவில்லை.

இந்தப் படத்தில் துணை நடிகராக அறிமுகமான பாபு, இந்தப்படம் வெளியான பின்பு யோகிபாபுவாக காமெடி, கதையின் நாயகன், கதாநாயகன் என நடித்துக்கொண்டிருக்கிறார் 2013 ஜெயம்ரவி நாயகனாக நடித்த ஆதிபகவன் படம் அமீர் இயக்கத்தில் வெளியானது. அதற்குப் பின் 2018ல் ஆர்யா நாயகனாக நடிக்கும் சந்தனத்தேவன், அமீர் இயக்கத்தில் தொடங்கப்பட்டு 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஆர்யாவின் அப்போதைய வியாபார மதிப்பை கடந்து படத்தின் பட்ஜெட் அதிகமானதால் படத்தை தொடர முடியாமல் முடங்கியது. இதற்கு இடையில் அமீர் கதையின் நாயகனாக நடித்து முடித்துள்ள நாற்காலி படம் வெளியிடப்படாமல் முடங்கியது. இந்த நிலையில் இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

“என் மீது அன்பு கொண்டு இன்றைய தினம் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன உங்கள் அத்தனை உள்ளங்களுக்கும் இயக்குனர் அமீரின் நன்றியுடன் கூடிய வணக்கங்கள்.இந்த மகிழ்வான தருணத்தில் எனது திரைப்பயணத்தின் அடுத்த முயற்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.

எனது, ”அமீர் ஃபிலிம் கார்ப்பரேசன்” நிறுவனமும் – ”JSM பிக்சர்ஸ்” நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்ற புதிய திரைப்படத்தின் “PHOTO SHOOT” இன்று தொடங்கியது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.கதையின் நாயகர்களாக அமீர் மற்றும் ஆர்யாவின் தம்பி –சத்யாவும் நடிக்க, நாயகியாக சஞ்சிதா ஷெட்டி மற்றும் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

“மெளனம் பேசியதே”, “ராம்”, “பருத்திவீரன்” ஆகிய படங்களைத் தொடர்ந்து எங்களுடைய இப்படத்தின் ஒளிப்பதிவை ராம்ஜி செய்கிறார்.

கலை இயக்கம் வீரமணி, படத்தொகுப்பு அஹமது, மக்கள் தொடர்பு நிகில் ஆகியோரின் தொழில்நுட்பப் பங்களிப்பில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தை, “அதர்மம்”, “பகைவன்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ்கிருஷ்ணன் இயக்குகிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நானும், யுவன் ஷங்கர் ராஜாவும், ராம்ஜியும், சினேகனும் இணைந்து இத்திரைப்படத்திற்காக பணியாற்ற உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *