டிமான்டி காலனி 2 எப்போது?

entertainment

நடிகர் அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும் ‘டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளனர். இந்த கூட்டணி ஏற்கனவே ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான ‘டிமான்டி காலனி’ படத்தினை வழங்கியிருந்தனர்.

இப்போது மீண்டும் இதே படத்தின் 2-ம் பாகத்திற்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குநரான வெங்கி வேணுகோபால் இயக்குகிறார்.

2015-ம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படம் மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற படங்களின் மூலம் இப்போது முதன்மையான திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

இப்போது இருவரும் ‘டிமான்டி காலனி-2’ மூலம் அந்த மாயாஜாலத்தை மீண்டும் உருவாக்க இணைந்துள்ளனர்/

இது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில், ’டிமான்டி காலனி’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்குமே பரவசத்தைத் தந்த படம் அது. இதனாலேயே இவர்கள் சமீப காலங்களில் ‘டிமான்டி காலனி 2’ பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்தக் கேள்விகளும், விசாரணைகளும்தான் எனக்கு இதன் 2ஆம் பாகத்தை உருவாக்க தூண்டியது. அருள்நிதி சாரை இதற்காக மீண்டும் நான் அணுகியபோது, அவருக்கும் இந்தப் புதிய திரைக்கதை பிடித்திருந்தது, உடனே நாங்கள் இந்த படத்தை உருவாக்க முடிவு செய்தோம்.தற்போது திரைத்துறையில் அருள்நிதியின் வளர்ச்சி அதிகரித்திருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும், இந்த படத்தில் அவர் இருப்பது ஒரு ரசிகர் கூட்டத்தை இழுக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

என்னை நம்பி எனது இயக்குநர் பாதையை தொடங்கி வைத்த அருள்நிதி, மீண்டும் என்னை நம்பி தயாரிப்பாளராக என்னை மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த ‘டிமான்டி காலனி’யை ஒரு சமரசமற்ற ஹார்ட்-கோர் ஹாரர் தொடராக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது இனி அடுத்தடுத்த பாகங்களைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும். வரும் ஜூலைக்குள் ‘டிமான்டி காலனி-2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்” என்றார்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *