~சூரி மூலம் சந்தானத்தை சூர்யா கிண்டல் செய்தாரா?

entertainment

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எல்லோரும் ஆதரவு தெரிவித்து வரும்நிலையில் நடிகர் சந்தானம் அட்வைஸ் கூறியிருந்தார். இதற்கு நகைச்சுவை நடிகர் சூரி மூலமாக நடிகர் சூர்யா பதிலடி கொடுத்திருக்கிறாரா? என்கிற விவாதம் எழுந்துள்ளது.

சென்னையில் சபாபதி திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பங்கேற்றார். அப்போது ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை தொடர்பாக சந்தானத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த சந்தானம், சினிமாங்கிறது 2 மணிநேரம் லைட் ஆப் பண்ணிட்டு எல்லாரும் எல்லா ஜாதிக்காரர்களும் மதத்தை சேர்ந்தவர்களும் பார்க்கிறது. அங்க இது தேவைப்படாத விஷயம். நீங்க இந்துமதத்தை தூக்கிகாட்டுங்க.. அல்லது எதை பிடிச்சிருக்கோ அதை தூக்கி காட்டுங்க. அது பிரச்சனை கிடையாது. ஆனால் அடுத்தவனை தாழ்த்தி காட்டாதீங்க.. இந்து மதம் சூப்பர்னா அதை சொல்லுங்க.. அதுக்காக கிறிஸ்டியானிட்டியை தாழ்த்தக் கூடாது.. அதுதான் என் கருத்து. நாம எதனை வேணும்னாலும் தூக்கி பேசலாம்.. அது பிரச்சனையே இல்லை என கூறியிருந்தார்.

மேலும் ஜெய்பீம் படமாக இருந்தாலும் எந்த படமானாலும் நான்சொல்றது இதுதான்..நாம ஒரு கருத்தை சொல்றோம். அது பிரச்சனை கிடையாது. ஆனா கிறிஸ்டியன் தப்பு.. அவன் தாழ்த்தப்பட்டவன்னு பேசக் கூடாது. எது நம்ம கருத்தோ அதை தூக்கி பேசலாம். அடுத்தவங்க ஹர்ட் பண்ற மாதிரி அவங்களை அமுக்கி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம் என கூறியிருந்தார்.

நடிகர் சந்தானத்தின் இந்த பேச்சு அறிவுரை பாணியில் இருந்தாலும் நடிகர் சூர்யா ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சந்தானத்துக்கு ஆதரவாக – எதிராக ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை தமது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் ஒவ்வொரு நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என ஜெய்பீம் படத்தை பாராட்டிய அனைவரது ட்வீட்களுக்கும் பதில்கூறி இருக்கிறார். இதில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு நடிகர் சூர்யா அளித்த பதில் இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூரி தமது ட்விட்டர் பக்கத்தில், இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம்ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன். ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை என பதிவிட்டிருந்தார்.

இதற்கு இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு என பதில் கூறிய நடிகர் சூர்யா இன்னொரு ஹீரோ என சூரியைத்தான் சொல்கிறாரா? அல்லது தமக்கு அறிவுரை என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிக்கும் தற்போது சபாபதி படத்தின் ஹீரோவான நடிகர் சந்தானத்தை சொல்கிறாரா? என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

**அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *