uஆஸ்கர் வென்ற ‘another round’ ரீமேக்கில் டி காப்ரியோ

entertainment

திரையுலகின் உயரிய விருதாகப் பார்க்கப்படுவது ஆஸ்கர். ஹாலிவுட் படங்களுக்கு விருது கொடுப்பது மட்டுமல்லாமல், உலகின் எந்த மூலையிலிருந்து வெளியாகும் படத்துக்கும் ஆஸ்கர் கிடைக்கும். அதற்காகவே சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பட்டியலை கொண்டிருக்கிறது ஆஸ்கர்.

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான விருது பட்டியலுக்கு அனைத்து நாடுகளிலிருந்தும் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பிவைக்கப்படும். கடந்த 2020க்கான ஆஸ்கரில் இந்தியாவிலிருந்து ஜல்லிக்கட்டு எனும் மலையாளப் படம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடம் இந்த சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் பட்டியலில் வெற்றி பெறும் படத்தின் மீதி உலக சினிமா ரசிகர்களின் கவனம் படும். அப்படி, கடந்த ஆஸ்கரில் சிறந்த படமாக `அனதர் டவுண்ட்` எனும் டானிஷ் மொழி படம் தேர்வானது. காமெடி டிராமா ஜானரில் Thomas Vinterberg இயக்கியிருந்த இந்தப் படத்தில் நேச்சுரலானா நடிப்பை வெளிப்படுத்திருப்பார் Mads Mikkelsen.

சொந்த நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் திரை விழா மேடைகளிலும் பாராட்டையும், விருதையும் வென்றது. இறுதியாக, ஆஸ்கரையும் கைப்பற்றியது.

புதிய தகவல் என்னவென்றால், இந்தப் படம் ஹாலிவுட்டில் ரீமேக் பண்ணும் வேலைகள் துவங்கியிருக்கிறது. பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோ தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான Appian Way மூலமாக தயாரிக்க இருக்கார். கூடுதல் சர்ப்ரைஸ் என்னவென்றால், அந்தப் படத்தில் Mads Mikkelsen நடித்த ரோலில் லியனார்டோ டி காப்ரியோ நடிக்க இருக்கிறார்.

அனதர் ரவுண்ட் ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய Thomas Vinterberg தான் இந்த ரீமேக்கையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹாலிவுட் வெர்ஷனுக்கு வேறு இயக்குநரை தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது, டி காப்ரியோ `கில்லர் அஃப் தி ஃப்ளவர் மூன்` படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் வேலை முடிந்ததும், ரீமேக் வேலைகளில் இறங்குவார்.

**- ஆதினி**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *