சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி பல தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி என்பதோடு நில்லாமல், அவர் மனைவி மற்றும் மகளுக்கும் உலக ரசிகர்களிடையே ஒரு மவுசு உண்டு. அதிலும், தோனி மகள் ஸிவா செய்யும் சேட்டைகளை அவ்வப்போது இணைய உலகம் கண்டு வருவதால், தோனியை விட அவருக்கு ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம்.
தோனி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் சார்பாக எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. மாறாக ராணுவம் மற்றும் குடும்பத்துடன் மட்டுமே நேரம் செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்துக்குத் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது மகளுடன் உற்சாகமாக தனது விடுமுறை நாட்களைச் செலவிட்டு வருகிறார். இதனிடையே தோனியின் இரண்டு வயது மகளான ஸிவா, ‘அத்வைதம்’ என்ற மலையாளப் படத்தில் உள்ள ஒரு பாடலை தனது மழலைக் குரலால் பாடியுள்ளார். இந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராமில் தோனி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பனி படர்ந்த சூழல் ஸிவாவின் திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளதாக தோனி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் மேலானோர் லைக் செய்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார் தோனி.
‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்’ என்ற வள்ளுவரின் வாக்கு உலகுக்கே பொருந்தும்போது, தோனி மகளுக்குப் பொருந்ததா என்ன?
�,”