கிராமிய கலைஞருக்கு தருமபுரம் ஆதினம் வழங்கிய கௌரவம்!

Published On:

| By admin

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருத கிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகரும் நாட்டுப்புற இசை கலைஞருமான வேல்முருகன் அவர்களுக்கு தருமபுரம் ஆதினத்தால் “கிராமிய இசை கலாநிதி” என்கிற பட்டம் வழங்கப்பட்டது. அதனுடன், தருமபுரம் அதினத்தின் ஆஸ்தான பாடகராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு முன்பாக டாக்டர் யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தருமபுரம் ஆதினம் சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவித்துள்ளது இதுவே முதல் முறை.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் கே. பி. அசோக் குமார் ஆகியோர் முன்னிலையில் வேல்முருகனுக்கு “கிராமிய இசை கலாநிதி” எனும் பட்டத்தை வழங்கி தங்கப்பதக்கத்தை அளித்து தருமபுரம் ஆதினம் நாட்டுப்புற இசை கலைக்கு ஒரு கவுரவத்தை அளித்துள்ளது.

**அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share