தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் தனுஷ் பள்ளி சீருடையில் இருப்பது போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்களை தற்போது அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
வாத்தி படத்தைத் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். தமிழில் ‘வாத்தி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தெலுங்கில் ‘சார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் தனுஷ் கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்வியை வைத்து நடக்கும் மாஃபியா மற்றும் கல்வியைத் தனியார் மயமாக்குதலுக்கு எதிரான ஒரு இளைஞனின் போராட்டமாக இந்த கதை இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
‘வாத்தி’ திரைப்படம் மூலம் நேரடியாகத் தெலுங்கில் அறிமுகமாகிறார் தனுஷ். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் நூலி எடிட்டிங். கதையில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார்.
பள்ளி மாணவன் சீருடையில் தனுஷ் இருப்பதால் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா எனவும் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
**ஆதிரா**
�,”